சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 டைட்டில் வின்னர் இவர் தான்.. பரிசு மொத்தம் இந்தனை லட்சமா

பரபரப்பாக நடந்து வந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சியின் பைனல் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில் கெஸ்ட் ஆக கமல், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். வெற்றியாளர் யார் என்பதை கமல் தான் பிக் பாஸ் பாணியில் கையை பிடித்து அறிவித்தார்.
டைட்டில் வின்னர்
காயத்ரி தான் டைட்டில் வின்னர் என அறிவிக்கப்பட்டது. அவருக்கு பட்டத்தோடு 60 லட்சம் ரூபாய் மதிப்பு உள்ள ஒரு வீடு பரிசாக வழங்கப்பட்டது.
2ம் இடம் – நஸ்ரின்
இரண்டாவது இடத்தை நஸ்ரின் பிடித்து இருக்கிறார். அவர் மேடையில் கண்ணீர் விட்டு கதறி அழுதது எல்லோரையும் எமோஷ்னல் ஆக்கியது.
3ம் இடம் – சாரா ஸ்ருதி மற்றும் ஆத்யா
மூன்றாம் இடத்தை இரண்டு பேர் பிடித்து இருக்கின்றனர். முதல் அறிவிப்பாக ஏ.ஆர்.ரஹ்மான் தான் இதை அறிவித்தார்.
அவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் பணம் பரிசாக வழங்கப்பட்டது.