சூப்பர் சிங்கர், சரிகமப போல தமிழ் சின்னத்திரையில் வரப்போகும் புதிய ஷோ… வெளிவந்த தகவல்

சூப்பர் சிங்கர், சரிகமப போல தமிழ் சின்னத்திரையில் வரப்போகும் புதிய ஷோ… வெளிவந்த தகவல்


ரியாலிட்டி ஷோ

தமிழ் சினிமா ரசிகர்களை தாண்டி தமிழ் சின்னத்திரைக்கான ரசிகர்கள் தான் இப்போதெல்லாம் அதிகம். 

வாரா வாரம் புதிய படங்கள் ரிலீஸ் ஆகிறதோ இல்லையோ, மக்கள் பார்க்கிறார்களா என்பது எல்லாம் வேறு கதை. ஆனால் சின்னத்திரை ரசிகர்கள் அதிகமாகிவிட்டனர் என்பது மட்டும் உண்மை, இதனாலேயே தொலைக்காட்சிகளில் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் அதிகமாகிவிட்டது.

சூப்பர் சிங்கர், சரிகமப போல தமிழ் சின்னத்திரையில் வரப்போகும் புதிய ஷோ... வெளிவந்த தகவல் | New Show Announcement In Sun Tv

இப்போது அப்படி ஒரு குட் நியூஸ் வந்துள்ளது.

புதிய ஷோ

ரியாலிட்டி ஷோக்களில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட நிகழ்ச்சிகள் தான் சூப்பர் சிங்கர் மற்றும் சரிகமப ஷோ.

பாடல் திறமை கொண்டவர்கள் இந்த நிகழ்ச்சிகளில் போட்டிபோட்டு வெற்றியும் காண்கின்றனர். சமீபத்தில் கூட சூப்பர் சிங்கர் 11வது சீசன் முடிவுக்கு வந்தது, அந்த சீசன் வெற்றியாளராக நிகில் அறிவிக்கப்பட்டார்.

தற்போது ஒரு புதிய தகவல் வந்துள்ளது, அதாவது சன் டிவியில் சன் சிங்கர் ஜுனியர் 6வது சீசன் வரும் மார்ச் மாதம் முதல் ஒளிபரப்பாக உள்ளதாம். ஆனால் இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை.

சூப்பர் சிங்கர், சரிகமப போல தமிழ் சின்னத்திரையில் வரப்போகும் புதிய ஷோ... வெளிவந்த தகவல் | New Show Announcement In Sun Tv


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *