சீரியல் நடிகை கண்மணி மனோகரன் வீட்டில் விசேஷம்.. வீடியோவுக்கு குவியும் வாழ்த்து

பாரதி கண்ணம்மா, அமுதாவும் அன்னலக்ஷ்மியும் போன்ற தொடர்களில் நடித்தவர் கண்மணி மனோகரன். அவர் கடந்த வருடம் சண் டிவி தொகுப்பாளர் அஸ்வத் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.
2024 செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
கர்ப்பம்
இந்நிலையில் தற்போது கண்மணி மனோகரன் தான் கர்பமாக இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.
அவர் வீடியோ வெளியிட்டு இதை ரசிகர்களுக்கு தெரிவித்து இருக்கும் நிலையில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.






