சீதா தாலியை திருடியது யார் தெரியுமா? கண்டுபிடித்த மீனா… சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ

சிறகடிக்க ஆசை
கோவிலில் சீதா சாமி தரிசனம் செய்துகொண்டிருந்த போது, திடீரென முக்காடு போட்டு வந்த பெண், சீதாவின் தாலியை திருடிவிட்டு ஓடினார். யார் அந்த பெண்? எதற்காக இப்படி செய்தார்? என பல கேள்விகளுடன் நேற்று எபிசோட் மிகவும் பரபரப்பாக முடிவுக்கு வந்தது.
போலி சாமியார்
இந்த நிலையில், வரும் வாரம் சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில், சீதா தனது தாலியை காணவில்லை என மீனாவிடம் கூற, தாலியை திருடிய பெண்ணை துரத்தி செல்கிறார் மீனா.
அப்போது, அந்த பெண் போட்டிருந்த முக்காடை மீனா எடுக்க, தனது வீட்டிற்கு வந்த சாமியாராக நடித்த பெண்தான் சீதாவின் தாலியை திருடி சென்றுள்ளார் என தெரிகிறது.
ஆனால், மீனாவால் அந்த திருடியை பிடிக்க முடியவில்லை.
உடனடியாக அங்கிருந்து கோவிலுக்கு வரும் மீனா, என்ன நடந்தது என்பதை முழுமையாக அனைவரிடமும் கூறுகிறார். சாமியாராக நடித்தது ஒரு திருடி, அவள்தான் சீதாவின் தாலியை திருடியுள்ளார் என மீனா கூற, விஜயா இதனை நம்பவில்லை.
அப்படி நான் அந்த திருடியை அழைத்து வந்து நிரூபித்துவிட்டால் என்ன செய்வீர்கள் என விஜயாவிடம் முத்து கேட்க, “அப்படி ஒன்று நடந்தால் பார்க்கலாம்” என கூறுகிறார். இதன்பின், மீனா எங்கு அந்த பெண்ணை மிஸ் செய்தாரோ, அங்கு சென்று CCTV மூலம் திருடியை கண்டுபிடிக்கிறார் முத்து.
இதன்பின் சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.






