சிவாங்கி வாங்கிய சொகுசு கார்.. விலை எத்தனை கோடி தெரியுமா

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடகியாக தனது திறமையை நிரூபித்தவர் சிவாங்கி. அதற்குப் பிறகு அவர் காமெடி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களை சிரிக்க வைத்தார்.
இந்நிலையில் விஜய் டிவியில் இருந்து வெளியேறி அவர் சன் டிவியின் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்..
சொகுசு கார்
இந்நிலையில் சிவாங்கி புதிய மெர்சிடிஸ் பென்ஸ் GLE கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அதன் விலை சுமார் ஒன்றரை கோடி ரூபாய் ஆகும்.
அப்பா, அம்மா உடன் சென்று அந்தக் காரை அவர் வாங்கி இருக்கும் வீடியோவை நெகிழ்ச்சியாக அவர் instagram-ல் வெளியிட்டு இருக்கிறார். அதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.