சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் மோகதி ப்ரியாவின் புதிய Project… நாயகன் யார் தெரியுமா?

சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் சீரியல் ஆரம்பித்த நாள் முதல் வெற்றிகரமாக ஓடும் தொடர் என்றால் அது சிறகடிக்க ஆசை தான்.
கடந்த வாரம் எல்லாம் க்ரிஷ் பிரச்சனை, தொடர் ஆரம்பித்த நாள் முதல் சஸ்பென்ஸாக வைத்த முத்து சிறுவயது கதை போன்ற விஷயங்கள் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பானது. இன்றைய எபிசோடில், முத்துவிற்கு மனோஜ் எங்கு அடி வாங்கினார் என்ன விஷயம் என்பதெல்லாம் தெரிய வருகிறது.
இந்த பிரச்சனைக்கு முடிவு கட்ட முத்து ஒரு பிளான் போட்டு அதை செயல்படுத்துகிறார்.
புதிய Project
இந்த சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதை வென்ற நாயகியாக வலம் வருகிறார் மீனா கதாபாத்திரத்தில் நடித்த கோமதி ப்ரியா.
இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் சீரியல்கள் நடித்து கலக்கி வருகிறார்.
தற்போது அவரின் புதிய புராஜக்ட் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது அடியே சிறுக்கி மகளே என்கிற ஆல்பம் பாடலின் கோமதி பிரியா நடித்துள்ளார்.
இதில் இவருக்கு ஜோடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் நவீன் நடித்துள்ளார். கிராமத்து சாயலில் உருவாகியுள்ள இந்த பாடல் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளதாம்.