சின்னத்திரையில் பல கோடி சம்பளம் வாங்கும் பிரபலம் யார் தெரியுமா?.. ஒரு மாதத்திற்கு இத்தனை கோடியா?

சின்னத்திரை
தமிழ் சினிமாவில் வெள்ளித்திரையை தாண்டி இப்போது சின்னத்திரை தான் கலக்கி வருகிறது என்பது நமக்கே தெரியும்.
படங்களில் நடிக்கும் நடிகர்களை விட சின்னத்திரையில் வரும் பிரபலங்களை பற்றிய விவரங்களை ரசிகர்களிடம் கேட்டால் சட்டென கூறிவிடுவார்கள்.
அந்த அளவிற்கு மக்களின் கவனம் இப்போது தொலைக்காட்சி பக்கம் திரும்பியுள்ளது.
சம்பளம்
தற்போது சின்னத்திரையில் அதிகம் சம்பளம் வாங்கும் ஒரு பிரபலத்தை பற்றிய செய்தி தான் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என எல்லா இந்திய மொழிகளிலும் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ்.
ஹாலிவுட்டில் கலக்கிய இந்நிகழ்ச்சி முதலில் ஹிந்தியில் தான் தொங்கப்பட்டது, இதனை நடிகர் சல்மான் கான் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
கடைசியாக ஹிந்தியில் 18வது சீசன் முடிவுக்கு வந்தது.
இந்த சீசன் மூலம் சல்மான் கானுக்கு ரூ. 250 கோடி சம்பளம் கிடைத்துள்ளது, அதாவது மாதத்திற்கு ரூ. 60 கோடி சம்பளம் பெற்று சின்னத்திரையில் அதிகம் சம்பளம் வாங்கும் பிரபலமான சல்மான் கான் உள்ளார்.