சினிமாவில் நாயகியாக அறிமுகமாகும் நாட்டாமை பட டீச்சர் மகள்… யாருடன் நடிக்கிறார் பாருங்க

நாட்டாமை படம்
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார், குஷ்பு, மீனா ஆகியோர் நடிப்பில் கடந்த 1994ம் ஆண்டு வெளியான திரைப்படம் நாட்டாமை.
செம வெற்றியடைந்த இப்படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ராணி. இப்படத்திற்கு பிறகு கர்ணா, அவ்வை சண்முகி, ஜெமினி போன்ற படங்களில் நடித்திருந்தார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு சின்னத்திரையில் அறிமுகமாகி நடித்தும் வந்தார்.
நடிகை மகள்
இந்த நிலையில் டீச்சராக நடித்து இப்போதும் மக்கள் மனதில் இருக்கும் ராணியின் மகள் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் கொம்பு சீவி படத்தின் மூலம் ராணியின் மகள் தார்னிகா நாயகியாக அறிமுகமாகியுள்ளாராம்.






