சமூக வலைதளத்தில் வெளியேறியது ஏன், நடிகர் ஸ்ரீயின் தற்போதைய நிலை.. லோகேஷ் கனகராஜ் பேட்டி

லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ், இவரைப் பற்றி எந்த ஒரு அறிமுகமும் தேவையில்லை.
காரணம் இவரது படைப்புகளே இவரை பெரிய அளவில் பிரபலம் அடைய வைத்துவிட்டது.
தற்போது ரஜினியை வைத்து கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார், இப்படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் செம பிஸியாக நடந்து வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன் லோகேஷ் சமூக வலைதளங்களில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுப்பதாக கூறியிருந்தார்.
பேட்டி
இந்த நிலையில் சூர்யாவின் அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தபின் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், நான் சோசியல் மீடியாவில் இருந்து பிரேக் எடுத்ததற்கு காரணமே ஏதாவது ஒரு விஷயம் திரும்பத் திரும்ப வந்துகொண்டே உள்ளது, அது என்னுடைய வேலையை பாதிக்கிறது.
இடையில் ஸ்ரீ பற்றிய செய்தி எல்லாம் கேள்விப்பட்டிருப்பீங்க, அது எல்லாம் என்னை ரொம்ப பாதித்தது. அதனால் தான் நான் ஒரு 3 மாதம் பிரேக் எடுக்கலாம் என முடிவு செய்தேன்.
அதேபோல் நடிகர் ஸ்ரீ இப்போது நன்றாக இருக்கிறார், அவரைப் பற்றி இன்னொரு பேட்டியில் பார்ப்போம் என கூறியுள்ளார்.