சன் டிவியில் வரப்போகும் புதிய சீரியல்… நாயகி ஹீமா பிந்து, நாயகன் யார் தெரியுமா?

சன் டிவி
சன் டிவி, சீரியல்களின் ராஜாவாக கெத்தாக வலம் வருகிறார்கள்.
காலை தொடங்கி இரவு வரை ஏகப்பட்ட சீரியல்கள், இடையில் படம் இல்லாமல் கூட சீரியல்கள் ஒளிபரப்ப அவர்கள் நினைத்தாலும் அவர்களிடம் நிறைய சீரியல்கள் ஸ்டாக்கில் உள்ளது.
இப்போது ஒளிபரப்பாகும் தொடர்களை தாண்டி அடுத்தடுத்து லைனில் நிறைய தொடர்கள் உள்ளது.
வரும் திங்கள் முதல் வினோதினி என்ற சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.
அடுத்து துளசி என்ற சீரியல் வர இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.
புதிய தொடர்
இப்போது சன் தொலைக்காட்சியில் வரப் போகும் புதிய சீரியல் குறித்த தகவல் வந்துள்ளது.
இரு மலர்கள் என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் ஹீமா பிந்து மற்றும் ஜீவிதா ஆகியோர் நாயகிகளாக நடிக்க சந்தோஷ் நாயகனாக நடிக்க உள்ளாராம். மற்றபடி இந்த சீரியல் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.