சன் டிவியில் சிறகுகள் புதிய சீரியல் என்ட்ரி, பழைய தொடரின் நேரம் மாற்றம்… முழு விவரம்

சன் டிவி
சீரியல்களின் ராஜாவான சன் டிவியில் சமீபத்தில் செல்லமே செல்லமே என்ற சீரியல் முடிவுக்கு வந்தது.
சண்டையால் பிரிந்த ஒரு ஜோடி தங்களது குழந்தைகளால் மீண்டும் ஒன்று சேரும் கதையாக சீரியல் இருந்தது. அடுத்தடுத்து நல்ல கதைக்களத்துடன் சீரியல் ஒளிபரப்பாகி வந்த நிலையில் திடீரென தொடரை முடித்துவிட்டார்கள்.
அந்த சீரியல் முடிந்த கையோடு சிறகுகள் என்ற புதிய சீரியலின் புரொமோவையும் வெளியிட்டார்கள்.
மாற்றம்
தற்போது புதியதாக ஒளிபரப்பாக போகும் சிறகுகள் சீரியல் ஒளிபரப்பாக போகும் நேரமும் மற்றொரு தொடரின் நேரம் மாற்றம் தகவலும் வந்துள்ளது.
சிறகுகள் சீரியல் திங்கள் முதல் இனி பிற்பகல் 2 மணிக்கும், லட்சுமி-இரு மலர்கள் மகா சங்கமம் திங்கள் முதல் இனி 2.30 மணி முதல் 3.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ளதாம்.






