க்ரிஷ் விஷயத்தில் வசமாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை பரபரப்பு கதைக்களம்

சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை கடைசி எபிசோடில், விஜயா டாக்டர் பட்டம் வாங்க விஜயா போடும் நாடகங்களில் ஒன்றாக அன்னதானம் போடுகிறார்.
அங்கு எதர்சையாக முத்து வர தனது அம்மா கையால் சாப்பிட வேண்டும் என அங்கு உட்காருகிறார். அங்கு முத்துவை பார்த்து விஜயா ஷாக் ஆனாலும் உணவு போடுகிறார்.
தனது அம்மா கையால் முதன்முறையாக சாப்பிடுவது நினைத்து எமோஷ்னல் ஆகிறார். அந்த சந்தோஷத்தை முத்து வீட்டில் வந்து கூறி செம சந்தோஷம் அடைகிறார். அப்போதும் விஜயா எதுவும் பேசாமல் அமைதியாகவே உள்ளார்.
அடுத்து முத்து-மீனா க்ரிஷை அழைத்துக்கொண்டு மருத்துவமனை சென்ற அவரது பாட்டியை பார்க்கிறார்கள், கொஞ்ச நேரம் பேசிவிட்டு நாளை வருகிறோம் என கூறிவிட்டு செல்கிறார்கள்.
அடுத்த வாரம்
பின் அடுத்த வாரத்திற்கான புரொமோவில், முத்து-மீனா மருத்துவமனை சென்று பார்த்த போது க்ரிஷ் பாட்டி அங்கு இல்லை, இதனால் ஷாக் ஆகிறார்கள்.
விஜயா மருத்துவமனையில் க்ரிஷ பாட்டி காணாமல் போனதை அறிந்து இவனை இவர்களை தலையில் கட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார் என கோபமாக திட்டுகிறார்.
ரோஹினியிடம் உண்மையை கூறு என அவரது அம்மா எவ்வளவோ கூறியும் அவர் ஒப்புக்கொள்ளாததால் அவர் இந்த முடிவு எடுத்திருப்பார் என தெரிகிறது,
முத்து க்ரிஷ் பாட்டி எங்கே இருக்கிறார் என தேடிச்சென்றால் ரோஹினி சிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.