கோடிக்கணக்கில் வசூலை அள்ளும் கூலி.. ப்ரீ புக்கிங் பாக்ஸ் ஆபிஸ் விவரம்

கூலி
2025ம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு மாபெரும் வசூலை அள்ளித்தரப்போகும் படமாக கூலி திரைப்படத்தை எதிர்பார்த்த ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்திற்காக ப்ரீ புக்கிங் வெளிநாடுகளில் அமோகமாக நடைபெற்று வருகிறது.
ப்ரீ புக்கிங்
அதன்படி, இதுவரை நடைபெற்ற ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 12 கோடிக்கும் மேல் வசூலை இப்படம் செய்துள்ளது.
கண்டிப்பாக ரிலீசுக்கு முன் இப்படம் ப்ரீ புக்கிங்கிலேயே மாபெரும் வசூல் சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படம் தமிழ் சினிமாவின் முதல் ரூ. 1000 கோடி வசூல் படமாக அமையும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.