கொடூரமாக தாக்கிய குணசேகரன், ரத்தம் சொட்ட உயிருக்கு போராடும் ஈஸ்வரி.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ

சன் டிவி
சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக இந்த வாரம் எல்லா தொடர்களின் கதைக்களமும் அமைந்திருப்பது நன்றாக தெரிகிறது.
சிங்கப்பெண்ணே சீரியலில், பஞ்சாயத்தில் தன்னை ஏமாற்றியவன் யார் என்பதை கண்டுபிடித்து இங்கே வருவேன் என சபதம் எடுத்துவிட்டு செல்கிறார்.
மூன்று முடிச்சு சீரியலில் நந்தினிக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்க சூர்யா முயற்சி எடுக்கிறார்.
இப்படி ஒவ்வொரு சீரியலின் கதைக்களமும் மாஸாக இருக்கிறது.
எதிர்நீச்சல்
அப்படி திருச்செல்வம் இயக்கிய எதிர்நீச்சல் தொடர்கிறது கதைக்களத்தில் பரபரப்பு கதைக்களம் உள்ளது.
அதாவது தர்ஷன் திருமணம் குறித்து ஈஸ்வரி நேரடியாக குணசேகரனிடம் பேசுகிறார். அவர்களின் பேச்சு வார்த்தையில் குணசேகரன் ஈஸ்வரியை கொடூரமாக தாக்குகிறார்.
இதனால் ரத்த சொட்ட ஈஸ்வரி உயிருக்கு போராட தர்ஷன் மற்றும் நந்தினி அவரை காப்பாற்ற போராடுகிறார்கள்.
உதவிக்கு சென்ற கதிரை யாரும் அவர்களிடம் செல்லக் கூடாது என குணசேகரன் கூற அவர் பின்வாங்குகிறார்.
தர்ஷன் என் அம்மாவுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு உங்களை சும்மா விட மாட்டேன் என கூறுகிறார். இதோ இன்றைய எபிசோடின் புரொமோ,