கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தால் சூர்யா காலி.. இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பேட்டி

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தால் சூர்யா காலி.. இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பேட்டி


சூர்யா 

முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக கருப்பு படம் வெளிவரவுள்ளது. பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் தேர்தல் முடிந்தபின் வெளிவரும் என இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூறியுள்ளார். இதை தொடர்ந்து தனது 46வது மற்றும் 47வது படங்களில் சூர்யா பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தால் சூர்யா காலி.. இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பேட்டி | Ks Ravikumar Talk About Suriya Risky Stunt Scene


இயக்குநர் கே. எஸ். ரவிகுமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி 2009ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஆதவன். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து சரோஜா தேவி, வடிவேலு, நயன்தாரா, ரமேஷ் கன்னா என பலரும் நடித்திருந்தனர்.

இப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் ஹெலிகாப்டரில் தொங்கியபடி ஸ்டண்ட் செய்திருப்பார் நடிகர் சூர்யா. அந்த அனுபவத்தை பற்றி இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

கே.எஸ். ரவிக்குமார் பேட்டி



இதில் “ஆதவன் பட படப்பிடிப்பில், ஹெலிகாப்டரில் தொங்கிக்கொண்டே பாம் வைக்கிற மாதிரி ஒரு சீன் இருந்தது. நான் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் சூர்யாவே அந்த ரிஸ்க்கை எடுத்தார். கீழ இருந்து ரோப்ல ‘ஃபுல் ஃபோர்ஸ்’-ல அவரை மேல இழுத்தார்கள். அப்போ எதிர்பாராத விதமா, ஹெலிகாப்டரில் இருந்த கம்பி நேரா அவர் தலையில் இடிக்கிற மாதிரி வந்தது.

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தால் சூர்யா காலி.. இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பேட்டி | Ks Ravikumar Talk About Suriya Risky Stunt Scene

நல்ல வேளையா அவரு டக்குனு அசைந்ததனால், கம்பி அவர் தோள்பட்டையில் மட்டும் உரசிவிட்டு போய்விட்டது. ஒரு வினாடில பெரிய விபத்து நடக்காம தப்பித்தார். கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தால் சூர்யா காலி” என கூறியுள்ளார்.  


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *