கைதி 2 பற்றி எனக்கு எதுவும் தெரியாது.. நடிகர் கார்த்தி அதிர்ச்சி அப்டேட்

நடிகர் கார்த்தியின் சூப்பர்ஹிட் படமான கைதி படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பே தகவல் வந்தது.
ஆனால் தற்போது வரை எந்த அறிவிப்பும் வரவில்லை. லோகேஷ் கனகராஜ் தான் ஹீரோவாக நடிக்கும் படத்தில் தான் கவனம் செலுத்தி வருகிறார்.
எனக்கு தெரியாது
இந்நிலையில் கார்த்தி தற்போது நடித்து இருக்கும் வா வாத்தியார் படத்தின் ப்ரோமோஷனுக்காக தமிழ்நாடு, தெலுங்கு மாநிலங்கள் என பல இடங்களுக்கு சென்று நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இருக்கிறார்.
அங்கு அவரிடம் கைதி 2 படத்தின் அப்டேட் கொடுங்க என கேட்டதற்கு, ‘எனக்கு எதுவும் தெரியாது. என்னிடம் கைதி 2 பற்றி எந்த அப்டேட்டும் இல்லை’ என பதில் கொடுத்து இருக்கிறார்.
அதனால் கைதி 2 படம் இப்போதைக்கு தொடங்க வாய்ப்பு எதுவும் இல்லை என்பது மட்டும் உறுதி ஆகி இருக்கிறது.






