கூலி படம் இதுவரை ப்ரீ புக்கிங்கில் செய்திருக்கும் வசூல்.. எவ்வளவு தெரியுமா

கூலி
ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு வரும் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் கூலி.
ரஜினியின் படம் என்றாலே பிசினஸ் வேற லெவலில் இருக்கும். அதை தொடர்ந்து ப்ரீ புக்கிங் களைகட்டும். அந்த வகையில் கூலி திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் வெளிநாட்டில் பட்டைய கிளப்பி வருகிறது.
ப்ரீ புக்கிங்
ஆம், கூலி படம் ரிலீஸ் ஆக இன்னும் 7 நாட்கள் உள்ளன. இந்த நிலையில், இதுவரை உலகளவில் நடந்துள்ள ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 19 கோடிக்கும் மேல் வசூலை அள்ளியுள்ளது.
இந்தியாவில் கூலி படத்தின் ப்ரீ புக்கிங் துவங்கிய பின் கண்டிப்பாக மாபெரும் சாதனையை அட்வான்ஸ் புக்கிங்கில் இப்படம் செய்யும் என கூறப்படுகிறது.
மேலும் தமிழ் சினிமாவில் முதல் ரூ. 1000 கோடி படமாக இப்படம் அமையும் என்றும் திரையுலகினரால் எதிர்பார்க்கப்படுகிறது.