’கூலி’ டைட்டில் மீண்டும் மாற்றம்.. ட்ரோல்கள் காரணமாக புது டைட்டில் அறிவிப்பு

சூப்பர்ஸ்டார் ரஜினியின் கூலி படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் தற்போது படத்தின் வியாபாரம் சூடுபிடித்து இருக்கிறது.
ஹிந்தியில் இந்த படத்தை மஜ்தூர் (Majdoor) என்ற பெயரில் ஹிந்தியில் ரிலீஸ் செய்வதாக போஸ்டர் உடன் அறிவித்து இருந்தனர். அதற்கு கடும் ட்ரோல்கள் வந்தது. இது மோசமான முடிவு என பலரும் ட்ரோல் செய்தனர்.
டைட்டில் மாற்றம்
இந்நிலையில் அதிகம் விமர்சனங்கள் வந்ததால் ஹிந்தி டைட்டிலை மீண்டும் மாற்றி இருக்கின்றனர். “கூலி: த பவர்ஹவுஸ்” (Coolie The Powerhouse) என டைட்டிலை மாற்றியுள்ளனர்.
அது தற்போது லேட்டஸ்ட் போஸ்டர்களில் மாற்றப்பட்டு இருக்கிறது. இதோ பாருங்க.