கூட்ட நெரிசலுக்கு நடுவில் சிக்கிய ராஷ்மிகா.. விஜய் தேவரகொண்டா என்ன செய்திருக்கிறார் பாருங்க
நடிகை ராஷ்மிகா தேசிய அளவில் பிரபலமான ஹீரோயினாக இருக்கிறார். அவருக்கு சமீபத்தில் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் திருமணம் நடந்து முடிந்தது.
அவர்கள் இருவரும் தாய்லாந்துக்கு சமீபத்தில் ஹனிமூன் சென்று இருந்த புகைப்படங்களும் வெளியாகி வைரல் ஆகின.
கூட்ட நெரிசல்
இந்நிலையில் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் Ranabaali ஷூட்டிங்கிற்காக அனந்தபூர் சென்று இருந்தனர். அங்கு இருக்கும் கோவில் ஒன்றில் அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அப்போது கோவிலுக்கு வெளியே அதிகம் கூட்டம் கூடிவிட்டது. அவர்களை பார்க்க அதிகம் பேர் வந்ததால் நெரிசல் ஏற்பட்டது. அதற்கு நடுவில் ராஷ்மிகாவை விஜய் தேவரகொண்டா பாதுகாப்பாக அழைத்து சென்ற வீடியோ தற்போது வெளியாகி வைரல் ஆகி உள்ளது.






