குட் நைட் பட இயக்குநருக்கு சிறப்பு பரிசளித்த சிவகார்த்திகேயன்.. ஏன் தெரியுமா?

சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக அமரன் திரைப்படம் வெளியானது. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.
அமரன் திரைப்படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வந்தார். அப்பட வேலைகளை முடித்தவர் அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடிக்கிறார்.
அதை தொடர்ந்து, சிவகார்த்திகேயனின் 24-வது படத்தை ‘குட் நைட்’ படத்தின் இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏன் தெரியுமா?
இந்நிலையில், விநாயக் சந்திரசேகரனுக்கு சிவகார்த்திகேயன் பரிசளித்திருக்கிறார். இயக்குநரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து கூறி சிறப்பு பரிசு ஒன்றை வழங்கி உள்ளார்.
தற்போது, சிவகார்த்திகேயன் உடன் இருக்கும் அந்த போட்டோவை இயக்குநர் விநாயக் அவரது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து ‘வாழ்த்துகள் மற்றும் பரிசுக்கு மிக்க நன்றி சிவகார்த்திகேயன் அண்ணா.
இந்த வருட பிறந்தநாளை இது மிகவும் சிறப்பாக்கியது” என்று தெரிவித்துள்ளார். தற்போது, இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,
Thank you so much for the wishes and gift @Siva_Kartikeyan anna ❤️
This year bday is very special !! pic.twitter.com/9tG5izPNQ9— Vinayak Chandrasekaran (@imvinayakk) June 24, 2025