குடும்பத்தினர் செய்த காரியம், எல்லோரின் முன்பும் ஷாக்கிங் முடிவு எடுத்த கோமதி… பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

குடும்பத்தினர் செய்த காரியம், எல்லோரின் முன்பும் ஷாக்கிங் முடிவு எடுத்த கோமதி… பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய்யில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியன்-கோமதி பிரச்சனை தான் முக்கிய விஷயமாக சென்று கொண்டிருக்கிறது.

கடைசி எபிசோடில், வீட்டில் மயக்கம் போட்ட கோமதி மருத்துவமனையில் சேர்க்கப்பட குடும்பமே சோகத்தில் மூழ்கிவிட்டனர். வீட்டில் கோமதி இல்லை என்றதும் ஒரு மாதிரி உள்ளது என பாண்டியன் கூற அனைவரும் அதையே பீல் செய்தார்கள்.

சிகிச்சைக்கு பின் கோமதி வீட்டிற்கு வந்துவிட்டார், அவரை விழுந்து விழுந்து அனைவரும் கவனிக்கிறார்கள்.

குடும்பத்தினர் செய்த காரியம், எல்லோரின் முன்பும் ஷாக்கிங் முடிவு எடுத்த கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 | Pandian Stores 2 Serial April 3 Episode

எபிசோட்

இன்றைய எபிசோடில், வீட்டிற்கு வந்த கோமதி அனைவரும் கவனித்த வண்ணம் உள்ளனர். கோமதி தனது மகன்களின் கையை பிடித்துக்கொண்டு ஒருவேளை நான் இறந்திருந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்கிறார். அதற்கு கதிர், அதைப்பற்றி எல்லாம் யோசிக்கவே முடியாது என்கிறார்.

குடும்பத்தினர் செய்த காரியம், எல்லோரின் முன்பும் ஷாக்கிங் முடிவு எடுத்த கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 | Pandian Stores 2 Serial April 3 Episode

செந்தில், உனக்கு வாய் கொழுப்பு அதிகம், ஆனால் எனக்கு நல்ல சாப்பாடு கிடைக்காமல் போகும் என்கிறார். சரவணன், நீ இல்லை என்றால் இந்த வீடே வெறிச்சோடி போகும், என்னென்ன எங்கு இருக்கிறது என்று தெரியாது. அரசியும் அதேபோல் கூறுகிறார்.

சோறு போட எல்லோரையும் கவனிக்க மட்டும் தான் கோமதி வேண்டும் போல என மீனாவிடம் புலம்புகிறார்.
அடுத்த நாள் காலையில் எல்லோரையும் அழைத்து ஒரு விஷயம் சொல்கிறார் கோமதி.

குடும்பத்தினர் செய்த காரியம், எல்லோரின் முன்பும் ஷாக்கிங் முடிவு எடுத்த கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 | Pandian Stores 2 Serial April 3 Episode

அனைவரும் வந்த பிறகு அறையில் இருந்து ஒரு பை எடுத்து வருகிறார். அதாவது வீட்டின் முக்கிய சாவிகள், பத்திரங்கள், பணம், நகை என எல்லோர் முன்பும் வைத்துவிட்டார். அதோடு வீட்டில் வேறு ஏதாவது விஷயம் குறித்து கேட்க வேண்டும் என்றால் கேட்டுவிடுங்கள் நான் போறேன் என்கிறார்.

அதைக்கேட்ட எல்லோரும் ஷாக் ஆகி என்ன என்று கேட்க, எனக்கு மரியாதை இல்லாத இடத்தில் நான் ஏன் இருக்க வேண்டும் என்கிறார். அவரின் இந்த செயலை கண்ட பாண்டியன், பாருங்கள் அத்தை அடுத்த நாடகத்தை தொடங்கிவிட்டாள் என்கிறார், அதைக்கேட்டதும் கோமதி செம கோபம் அடைகிறார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *