கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் அட்லீ பார்த்த வேலை- படத்தை வெளியிட்ட நடிகை.. ஆண்டனி கொடுத்த Reply

கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் அட்லீ பார்த்த வேலை- படத்தை வெளியிட்ட நடிகை.. ஆண்டனி கொடுத்த Reply


கீர்த்தி சுரேஷ்- ஆண்டனி திருமணத்தில் எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்ட நடிகைக்கு ஆண்டனி கொடுத்த ரிப்ளை ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது.


கீர்த்தி சுரேஷ்- ஆண்டனி திருமணம்




தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகர்களில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.


இவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

இதனை தொடர்ந்து விஜய், சூர்யா, விஷால் என கோலிவுட் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆரம்பித்தார்.

தற்போது டாப் நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, தமிழ் பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.




தேசிய விருது வாங்கிய நடிகையான கீர்த்தி சுரேஷ், தனக்குள் இருக்கும் மொத்த காதலையும் சினிமாவில் காட்டி நடித்து வருவதாக குடும்பத்தினர் பேட்டிகளில் கூறியிருக்கிறார்கள்.



இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் ஆண்டனி என்பவரை 15 வருடங்களாக காதலித்து வந்தார்.

கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் அட்லீ பார்த்த வேலை- படத்தை வெளியிட்ட நடிகை.. ஆண்டனி கொடுத்த Reply | Actor Kalyani Shares Keerthy Suresh Wedding Photos

இவர்களின் திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோவாவில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

கீர்த்தி சுரேஷ்- ஆண்டனி திருமணத்தில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

அரசியலுக்கு சென்ற பின்னர் பெரிதாக பொது விழாக்களில் பங்கெடுக்காத தளபதி விஜய் கூட இவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டிருந்தார்.



புகைப்படங்கள் வெளியிட்ட நடிகை


அந்த வகையில், கீர்த்தி சுரேஷ்- ஆண்டனி திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்களில் கல்யாணி பிரியதர்ஷனும் ஒருவர்.

கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் அட்லீ பார்த்த வேலை- படத்தை வெளியிட்ட நடிகை.. ஆண்டனி கொடுத்த Reply | Actor Kalyani Shares Keerthy Suresh Wedding Photos

இவர் திருமணத்தில் எடுத்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து அதில், “ உங்கள் திருமணமானது உங்கள் உறவைப் போலவே அழகாக இருந்தது, எனக்கு உங்கள் இருவரையுமே மிகவும் பிடிக்கும். திருமணத்தில் நீங்கள் இருவரும் மிகவும் அழகாக இருந்தீர்கள். நான் அழும் படங்களை எப்போதாவது வெளியிட்டால், நான் உங்களைக் கொலை செய்வேன் ♥️” என குறிப்பிட்டுள்ளார்.


இந்த பதிவிற்கு கீர்த்தி சுரேஷ் கணவர் ஆண்டனி, “நாங்களும் உன்னை அதிகம் நேசிக்கிறோம் அம்மூஸ்!!..” என பதில் கொடுத்துள்ளார்.



குறித்த பதிவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *