கில்லி – துணிவு படங்களின் ரீ ரிலீஸ் வசூல்.. பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்

கில்லி – துணிவு படங்களின் ரீ ரிலீஸ் வசூல்.. பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்


ரீ-ரிலீஸ்

புதிய படங்களுக்கு இணையாக ரீ-ரிலீஸ் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. கில்லி, சச்சின், மங்காத்தா, படையப்பா போன்ற படங்கள் ரீ-ரிலீஸில் மாபெரும் சாதனை செய்தன.

இதில் 2024ஆம் ஆண்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி தற்போது இரண்டாவது முறையாக கடந்த 20ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. அதே தேதியில் அஜித்தின் பிளாக்பஸ்டர் படமான துணிவு ரீ-ரிலீஸ் ஆனது.

பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்

இந்த இரண்டு படங்களையும் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வரும் நிலையில், வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளது. விஜய்யின் கில்லி படம் இரண்டாவது முறையாக ரீ-ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 1.2 கோடி வசூல் செய்துள்ளது.

மேலும் அஜித்தின் துணிவு திரைப்படம் இதுவரை பாக்ஸ் ஆபீஸில் ரூ. 50 லட்சம் வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படங்கள் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *