காவடி தூக்கி, தீமிதித்த மாகாபா ஆனந்த்.. பெரிய வேண்டுதலாம்!

விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் மாகாபா ஆனந்த். அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பும் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் மாகாபா ஆனந்த் காவடி தூக்கி கையில் தீச்சட்டி ஏந்தி தீ மிதித்து அம்மனிடம் ஒரு வேண்டுதலை வைத்திருக்கிறார்.
நிஜமான வேண்டுதல் எல்லாம் இல்லை. இது விஜய் டிவிக்காகத்தான்.
அது இது எது சீசன் 4
விஜய் டிவியில் அது இது எது நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது என்றும். அதற்கான ப்ரோமோவை தான் தற்போது வெளியிட்டிருக்கின்றனர்.
அதில்தான் மாகாபா ஆனந்த் அம்மனிடம் வேண்டுதல் வைத்திருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களே பாருங்க.
அது இது எது சீசன் 4 வரும் ஆகஸ்ட் 24ம் தேதி முதல் தொடங்குகிறது.