காலில் விழ யோசிக்காத KPY பாலா! என்ன ஆனது?.. பரபரப்பு வீடியோ

Kpy பாலா
சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. கலக்கப்போது யாரு நிகழ்ச்சி அவருக்கு நல்ல புகழ் கொடுக்க Kpy பாலா என ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
அந்நிகழ்ச்சியில் இருந்து குக் வித் கோமாளி பக்கம் வந்தவர் செம ரைமிங் காமெடி செய்து பெரிய அளவில் புகழ் பெற்றார். இந்த நிகழ்ச்சிக்கு பின் பல தனியார் நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வருகிறார்.
தற்போது, ஹீரோவாக படம் ஒன்றில் நடிக்கிறார். பாலா எப்போதும் தான் சம்பாதிக்கும் பணத்தை வைத்து கஷ்டத்தில் இருக்கும் பலருக்கு உதவி செய்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
என்ன ஆனது?
இந்நிலையில், சமீபத்தில் சாஸ்திகா என்ற குழந்தை மிகவும் மோசமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார், அவர் மருத்துவச் செலவுக்கு ரூ. 8 கோடி வேண்டும் என்று வீடியோ ஒன்றில் பாலா தெரிவித்திருந்தார்.
தற்போது, இந்த வீடியோவை கண்டு பலர் உதவி செய்துள்ளனர். இதனால் அந்த குழந்தைக்கு ரூ. 8 கோடி கிடைத்து மருத்துவம் செய்யப்பட்டுள்ளதாக பாலா நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், ” உதவி செய்த அனைவருக்கும் நன்றி, உங்கள் உதவியால் அந்த குழந்தை தற்போது இந்த உலகத்தில் வாழ முடிகிறது. உதவிய அனைவருக்கும் பாதம் தொட்ட நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார்.