கார்த்திகை தீபம் சீரியல் நடிகை அர்த்திகாவின் புதிய தொடர்.. சன் டிவியில் விரைவில், ஹீரோ யார் தெரியுமா?

கார்த்திகை தீபம்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர் கார்த்திகை தீபம்.
கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த தொடரில் கார்த்திக் ராஜ் மற்றும் அர்த்திகா இருவரும் முக்கிய ஜோடியாக நடித்தார்கள்.
தற்போது முதல் பாகம் முடிவடைய 2ம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது, இதில் கார்த்திக் ராஜ் நாயகனாக நடிக்க புதிய நாயகி நடிக்கிறார்.
புதிய தொடர்
தற்போது அர்த்திகா புதிய தொடரில் கமிட்டாகியுள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் வினோதினி என்ற புதிய தொடரில் தான் அர்த்திகா நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.
நாயகனாக கிருஷ்ணா நடிக்க உள்ளாராம், வரும் மே 26ம் தேதி முதல் இந்த தொடர் ஒளிபரப்பாக தொடங்கும் என கூறப்படுகிறது.