கர்ப்பமாக இருப்பதை அழகான போட்டோவுடன் அறிவித்த பாலிவுட் ஜோடி கத்ரீனா விக்கி கௌஷல்…

பிரபலங்கள்
பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை கத்ரீனா கைப்.
சினிமாவில் பிஸியாக நடித்து வந்தவர் கடந்த 2021ம் ஆண்டு நடிகர் விக்கி கவுஷலை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின் படங்களில் அவ்வளவாக தலைக்காட்டாமல் இருந்தார்.
ஆனால் தனியார் நிகழ்ச்சிகள், பட விழாக்கள் என தனது கணவருடன் சேர்ந்து கலந்துகொண்டு வருகிறார்.
குட் நியுஸ்
கடந்த சில மாதங்களாகவே நடிகை கத்ரீனா கைப் கர்ப்பமாக உள்ளார் என்ற செய்திகள் வலம் வர இதுகுறித்து அவர் தரப்பில் எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது.
இந்த நிலையில் நட்சத்திர ஜோடி கத்ரீனா மற்றும் விக்கி இருவரும் தாங்கள் கர்ப்பமாக இருப்பதாக ஒரு அழகிய போட்டோவுடன் அறிவித்துள்ளார்கள்.