கரூர் சம்பவம் பற்றிய கேள்வியால் டென்ஷன் ஆன விஜய்யின் அப்பா எஸ்ஏசி.. கோபமான பதில்

நடிகர் விஜய்யின் அரசியல் பிரச்சாரத்தில் நடந்த கூட்ட நெரிசல் உயிரழப்புகள் பற்றி தான் தற்போது ஒட்டுமொத்த அரசியல் வட்டாரமும் பேசிக்கொண்டிருக்கிறது.
விஜய்யை தாக்கி சில கட்சிகள் பேச, விஜய்க்கு ஆதரவாக பாஜக-வின் அண்ணாமலை உள்ளிட்ட சில அரசியல் தலைவர்கள் பேசி வருகின்றனர்.
கோபப்பட்ட எஸ்ஏசி
இந்நிலையில் எஸ்ஏசி இன்று நடிகர் விஜயகாந்த்தின் மாமியார் மரணத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்து இருந்தார். அவரிடம் செய்தியாளர்கள் கரூரில் 41 பேர் இறந்தது பற்றி கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் கோபமாக “ஒரு deathக்கு வந்திருக்கிறேன். இங்க போய் இந்த கேள்வி கேட்கலாமா. Already நாங்கலாம் கஷ்டத்தில் இருக்கிறோம்” என பதில் அளித்து இருக்கிறார்.