கதிர் கொடுத்த மறக்க முடியாத பரிசு, சந்தோஷத்தின் உச்சத்தில் காந்திமதி… பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
தமிழ் சின்னத்திரையில் குடும்பங்கள் கொண்டாடும் தொடர்கள் பல உள்ளது, அதில் ஒன்று தான் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.
இந்த வார எபிசோட் கதையில் காந்திமதியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்கிறார்கள். அவரோ எனது மகளும் வர வேண்டும் அனைவரும் ஒரு குடும்பமாக புகைப்படம் எடுக்க வேண்டும் என கேட்க மகன்கள் மறுக்கிறார்கள்.
ஆனால் காந்திமதி கொண்டாட்டத்திற்கு கோமதி குடும்பமும் வருகிறார்கள், அங்கு எந்த பிரச்சனையும் வர கூடாது என தனது மகன்களிடம் சத்தியம் வாங்குகிறார் காந்திமதி.
எபிசோட்
இன்றைய எபிசோடில் கோமதி தனது அம்மாவிற்கு வலையல் பரிசு கொடுக்க தயங்கி தயங்கி நிற்க அவரது அண்ணன்கள் யாரையாவது வந்து நிற்க வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
பின் காந்திமதி தனது மகளை அழைத்து பரிசை பெற்றுக்கொள்கிறார். அதோடு பேரன்கள், பேத்திகள் என கட்டியணைத்து சந்தோஷத்தின் உச்சத்திற்கே செல்கிறார். எல்லோரையும் தனது பக்கத்தில் நிற்க வைத்து புகைப்படங்கள் எடுத்துக்கொள்கிறார்.
கடைசியாக கதிர், தனது பாட்டி-தாத்தா ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை கொடுக்க காந்திமதி அளவே இல்லாத சந்தோஷம் அடைகிறார்.






