கண் விழிக்காத கோமதி, பதறி பாண்டியன் செய்த செயல், சோகத்தில் குடும்பம்… பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
கோமதி வீட்டில் கிச்சனில் வேலை பார்க்கும் போது திடீரென மயக்கம் ஏற்பட்டு தவறிவிழுந்தார்.
அப்போது அவர் அங்கிருந்து பாண்டியனை என்னங்க என அழைக்கிறார், ஆனால் அவர் வழக்கம் போல் இதுவும் நாடகம் தான் என நினைத்துக்கொண்டு சென்றுவிடுகிறார்.
அந்த நேரம் வீட்டிற்கு வந்த சரவணன் தனது அம்மாவின் நிலைக்கண்டு பதறிப்போகிறார், அதோடு தனது மாமா உதவியுடன் அம்மாவை மருத்துவமனையில் சேர்க்கிறார். விஷயம் கேள்விப்பட்டதும் பாண்டியன் கடையை அடைத்துவிட்டு மருத்துவமனை வருகிறார்.
எபிசோட்
மருத்துவமனையில் கோமதியை பரிசோதித்த டாக்டர் அவர்களுக்கு பிரசர், பிபி எல்லாம் குறைந்துள்ளது, கவனிக்கவில்லையா, அவர் மாத்திரை ஒழுங்காக எடுக்கிறாரா என கேட்கிறார்.
அதோடு எவ்வளவு நேரம் மயங்கி இருந்துள்ளார் என்றும் கேட்கிறார். ஆனால் யாரிடமும் பதில் இல்லை, கோமதிக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை என கூறிவிட்டு செல்கிறார். கோமதி கண் விழிக்காமல் இருப்பதை அறிந்து பாண்டியன் மிகவும் பதறுகிறார், அவரை மீனா சமாதானம் செய்கிறார்.
பின் நர்ஸ் 2 பேர் உள்ளே போய் பாருங்கள் என கூற பாண்டியன்-சரவணன் போகிறார்கள். பாண்டியன் கோமதி கோமதி என அழைக்கிறார், அவர் கண் விழிக்காததால் கதறி அழுகிறார்.
பாண்டியனை பார்த்த மீனா அவரை வீட்டிற்கு அழைத்துச்செல்ல சரவணனிடம் கூறுகிறார், முதலில் மறுக்கும் பாண்டியன் பின் செல்கிறார்.
வீட்டில் இந்த விஷயம் கேள்விப்பட்டு எல்லோரும் அழுதுகொண்டு இருக்கிறார்கள்.
வீட்டிற்கு வந்த பாண்டியன் யாரிடமும் பேசாமல் தனது அறைக்கு சென்று கோமதி அழைத்த போதே பார்த்திருந்தால் இந்த கஷ்டம் அவருக்கு இல்லையே என மனம் வருந்துகிறார்.






