கண்ணீர் விட்டு கதறி வீடியோ வெளியிட்ட பிக் பாஸ் ரியா.. என்ன ஆனது?

கண்ணீர் விட்டு கதறி வீடியோ வெளியிட்ட பிக் பாஸ் ரியா.. என்ன ஆனது?


விஜய் டிவி நடத்திய பிக் பாஸ் 8வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ரியா தியாகராஜன். வைல்ட் கார்டு எண்ட்ரியாக நுழைந்த அவர் ஷோவில் 2 வாரங்கள் மட்டுமே இருந்தார்.

அந்த நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவி நடத்திய சில ஷோக்களிலும் அவர் கலந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது ரியா கண்ணீருடன் கதறி அழுது வீடியோ வெளியிட்டு இருப்பது அனைவருக்கும் ஷாக் கொடுத்திருக்கிறது.

கண்ணீர் விட்டு கதறி வீடியோ வெளியிட்ட பிக் பாஸ் ரியா.. என்ன ஆனது? | Bigg Boss Riya Thiyagarajan Cries In Video

கண்ணீர்

அவரது அப்பா பற்றி தான் கண்ணீருடன் பேசி இருக்கிறார்.

“எனக்கும் அப்பாவுக்கும் நிறைய சண்டை வந்து கொண்டு இருக்கும். அவரிடம் பேசவே மாட்டேன். சண்டை போட்டுக் கொண்டே இருப்பேன். அவர் எங்கே போய் விடப் போகிறார் என்று குருட்டு நம்பிக்கையில் இருந்தேன்.”

“ஆனால் திடீரென ஒன்று நடந்தது. விபத்தில் என் அப்பா எங்களுடன் இல்லாமல் போய்விட்டார். அதன் பிறகு தான் அவர் என் வாழ்க்கை எவ்வளவு முக்கியம் என்பது புரிந்தது.”

“என்ன பிரச்சனை இருந்தாலும் பெற்றோருடன் பேசாமல், பார்க்க போகாமல் எல்லாம் இருக்காதீர்கள்” என கூறி கண்ணீர் விட்டு இருக்கிறார் ரியா. 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *