கண்ணீர் விட்டு அழுத நடிகை ஸ்ரீலீலா.. காரணம் இதுதானா

ஸ்ரீலீலா
தென்னிந்திய அளவில் சென்சேஷனல் நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. இவர் நடிப்பில் இந்த ஆண்டு தமிழில் பராசக்தி படம் வெளிவந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து சமீபத்தில் ஸ்ரீலீலா நடிப்பில் வெளிவந்த உஸ்தாத் பகத் சிங் படமும் மோசமான விமர்சனங்கள் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிப்பை தாண்டி ஸ்ரீலீலாவின் நடனத்திற்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர். குறிப்பாக புஷ்பா 2 படத்தில் இவர் ஆடிய நடனம் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
கண்ணீர் விட்டு அழுத நடிகை
இந்த நிலையில், நடிகை ஸ்ரீலீலா சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னைப் பற்றி வெளியாகும் கடுமையான ட்ரோல்களால் மனமுடைந்து பலமுறை கண்ணீர் விட்டு அழுததாக கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், ஆரம்பத்தில் எதிர்மறை விமர்சனங்களால் காயமடைந்தாலும், தற்போது எதை ஏற்க வேண்டும், எதை புறக்கணிக்க வேண்டும் என்கிற பக்குவம் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழிகளில் பிஸியாக நடித்து வரும் ஸ்ரீலீலா, தனது வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் கூறினார்.






