கஜினி பட வாய்ப்பை நிராகரித்தேன்.. சோனியா அகர்வால் காரணத்துடன் சொன்ன அதிர்ச்சியான விஷயம்

நடிகை சோனியா அகர்வால் தமிழில் பல முக்கிய படங்களில் நடித்தவர். இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்துகொண்டு அதன் பின் சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்றுவிட்டார் அவர்.
அவர் திருமணத்திற்கு பிறகு பெரிதாக படங்களில் நடிக்காமல் தான் இருந்தார். அந்த நேரத்தில் தான் வருக்கு கஜினி பட வாய்ப்பு தேடி வந்ததாம்.
நிராகரித்தேன்
“கஜினி படத்தில் அசின் மெயின் ஹீரோயினாக நடித்திருப்பார், மற்றொரு ரோல் எனக்கு வந்தது. ஆனால் அது வேண்டாம் என கூறிவிட்டேன். “
அசின் ரோல் என்றால் செய்கிறேன், இந்த ரோல் வேண்டாம் என சோனியா அகர்வால் கூறிவிட்டாராம். அதற்கு பிறகு தான் நயன்தாராவை அந்த ரோலில் முருகதாஸ் நடிக்க வைத்திருப்பார்.