ஓட்டு போட வந்த சீரியல் நடிகை ரவீனாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. கண்கலங்கி புகார்

விஜய் டிவியின் மௌன ராகம் 2 சீரியலில் ஹீரோயினாக நடித்து பிரபலம் ஆனவர் ரவீனா. மிக இளம் வயதிலேயே சின்னத்திரையில் பிரபலமாக மாறிய அவர் பிக் பாஸ் ஷோவிலும் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார்.
ரவினா அதற்கு பின் விஜய் டிவியில் சிந்து பைரவி சீரியலில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்த நிலையில் அதிலிருந்து திடீரென விலகி விட்டார். அதனால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக புகார் எழுந்த நிலையில் அவருக்கு சின்னத்திரை சங்கம் ரெட் கார்டு போட்டு இருக்கிறது.
அதனால் வேறு எந்த புதிய சீரியலிலும் நடிக்க முடியாமல் அவர் இருந்து வருகிறார். முதலில் ஒரு ஹீரோயின் கதை என சொல்லிவிட்டு அதன்பின் கதையில் மாற்றம் செய்ததால் தான் ரவீனா விலகியதாகவும் முன்பு தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது.
ஓட்டு போட கூடாதா.. ரவீனா கண்ணீர்
இந்நிலையில் சின்னத்திரை நடிகர்கள் சங்கத்திற்கு தேர்தல் இன்று நடைபெற்றது. அதில் சின்னத்திரை நடிகர்கள் எல்லோரும் சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். ஆனால் ரவீனா வாக்களிக்க வந்த போது அவர் ஓட்டு போடக்கூடாது என சொல்லி திருப்பி அனுப்பி விட்டார்கள். அவர் மீது ரெட்கார்டு போடப்பட்டு இருப்பதால் ஓட்டு போடக்கூடாது என கூறினார்களாம்.
அது பற்றி வெளியில் வந்து செய்தியாளர்களிடம் கண்ணீருடன் பேசி ரவீனா, “என்னை ஒரு வருடம் நடிக்கக் கூடாது என தொழில் ரீதியாக தான் தடை செய்திருக்கிறீர்கள். ஆனால் ஓட்டு கூட போடக்கூடாதா. நான் கடந்த மூன்று வருடங்களாக சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன்.”
”ரெட் கார்டு போடப்பட்டதால் தேர்தலில் போட்டியிடக் கூடாது என சொன்னீர்கள், ஏற்றுக்கொண்டேன். இப்போது ஓட்டு கூட போடக்கூடாதா. நான் ஓட்டு போட கூடாது என ஒருவர் சொல்லி இருக்கிறார், ஆனால் என்னிடம் பேசும்போது கட்டிப்பிடுத்து ஓட்டு கேட்டார்.”
”என்னால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் என சொல்கிறீர்கள். ஆனால் உங்களால் நான் ஒரு வருடமாக எந்த வருமானமும் இல்லாமல் நஷ்டத்தில் இருக்கிறேன். அதனால் உங்கள் நஷ்டம் சரியாகிவிடுமா. அது உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் சந்தோஷமாக இருங்கள்.”
“என்னை தடை செய்தது பற்றிய விஷயத்தை பற்றி இப்போது போசவில்லை, ஆது மிகப்பெரிய பிரச்சனை. ஆனால் எதற்காக என்னை ஓட்டு போட விடவில்லை” என சொல்லி கண்ணீருடன் ரவீனா பேட்டி அளித்திருக்கிறார்.