ஒரே பாடலில் நடனமாடும் பூஜா ஹெக்டே, மிருணாள் தாகூர், ஆயிஷா கான்.. பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?

ஒரே பாடலில் நடனமாடும் பூஜா ஹெக்டே, மிருணாள் தாகூர், ஆயிஷா கான்.. பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?


பெத்தி

இயக்குநர் புஜ்ஜி பாபு இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பெத்தி. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து அக்ஷய் திரைப்படமாக பெத்தி உருவாகி வருகிறது. வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி இப்படம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்ட நிலையில், தற்போது வரை படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனால் ரிலீஸ் தள்ளிப்போகுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

சிறப்பு பாடல்

இந்த நிலையில், பெத்தி திரைப்படத்தில் சிறப்பு பாடல் ஒன்றில் பூஜா ஹெக்டே, மிருணாள் தாகூர் மற்றும் ஆயிஷா கான் ஆகிய மூவரும் இணைந்து நடனமாடவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பாடலின் பட்ஜெட் மட்டுமே ரூ. 15 கோடியாம்.

இதில் பூஜா ஹெக்டேவிற்கு ரூ. 4 கோடி சம்பளம், மிருணாள் தாகூருக்கு ரூ. 3 கோடி சம்பளம், ஆயிஷா கானுக்கு ரூ. 1 கோடி சம்பளம் என கூறப்படுகிறது. மேலும், இந்த பாடலுக்கான செட் மட்டுமே ரூ. 5 கோடி என்கின்றனர். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *