ஏத்திவிட்ட மீனா, பாண்டியனை படுத்தும் கோமதி… கலகலப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் குடும்பங்கள் கொண்டாடும் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்.
கதையில் கதிர்-ராஜி திருமண விஷயம் கேட்டதில் இருந்து பாண்டியன் கோமதி மீது செம கோபத்தில் உள்ளார், அவரிடம் பேசுவது இல்லை, அவர் கொடுக்கும் விஷயங்களை வாங்குவதும் இல்லை.
அடுத்து மீனா செந்தில் வீட்டில் மயிலால் பிரச்சனை இருந்தது, ஆனால் செந்தில் மயிலுக்கு வேலை வாங்கி கொடுக்கவே கூடாது என்று கூறியிருக்கிறார். ஆனால் மீனா வேலை தேடி கொடுத்துவிட்டார் அது உண்மை தெரிந்து என்ன பிரச்சனை வருமோ.
இன்னொரு பக்கம் குமாருக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது.
இன்றைய எபிசோட்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில், கோமதி பாண்டியனை தனது வழிக்கு கொண்டு வர அவர் செய்யும் கலாட்டா காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மீனா சொன்ன ஐடியாபடி பாண்டியனுக்கு சாப்பாடு போடாமல் இருக்கிறார், காபி கொடுக்காமல் இருக்கிறார். நான் சொல்வது போல் நீங்களும் நடந்துகொள்ள வேண்டும் என சரவணன், ராஜி மற்றும் அரசியை மிரட்டுகிறார்.
ஒரு டம்ளர் காலையில் காபியை வாங்க பாண்டியன் படாதபாடு படுகிறார். கடைசியில் கோமதி சொன்னதை மீறி சரவணன் காபி எடுத்துக்கொண்டு வந்து பாண்டியனுக்கு கொடுக்கிறார். சரவணன் கொடுத்த சர்க்கரை காபி குடித்த பாண்டியன் நிலை எபிசோடில் காணுங்கள்.






