எம்.ஜி.ஆர் குறித்து அவதூறாக பேசிய பிரபல நடிகர்.. கண்டனம் தெரிவித்த நடிகர் விஷால்

சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் கொடிகட்டி பறந்தவர் எம்.ஜி. ராமசந்திரன். அன்று முதல் இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்த எம்.ஜி.ஆர் அவர்களை பற்றி பல விஷயங்களில் திரையுலக பிரபலங்கள் புகழ்ந்து பேசியுள்ளனர்.
ஆனால், தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத், எம்.ஜி.ஆர் குறித்து அவதூறாக பேசியிருப்பது, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவதூறாக பேசிய நடிகர்
இதில், “மறைந்த தெலுங்கு நடிகர் காந்தாராவ் கத்தி சண்டையில் மிகவும் சிறந்தவர். அவருடைய திரைப்படங்கள் தமிழகத்தில் பெரிய வெற்றியடைந்துள்ளன. அவரை பார்த்த எம்.ஜி.ஆர் பயந்து நடுங்கி விடுவார்” என ராஜேந்திர பிரசாத் கூறியுள்ளார்.
இந்த நிலையில், தற்போது இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்.
விஷால் கண்டனம்
“தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர் ராஜேந்திர பிரசாத்தின் சமீபத்திய கருத்துக்களை பார்க்கும்போதும், கேட்கும்போதும் அதிர்ச்சியளிக்கிறது, வெறுப்பூட்டுகிறது”.
“காந்தாராவ் அவர்களை புகழ்ந்து பேசியிருந்தாலும், புகழ்பெற்ற நடிகர் எம்.ஜி.ஆர் ஐயா அவர்களை இழிவுபடுத்தி குறைத்து மதிப்பிடுவது எங்கள் மக்களின் உணர்வுகளுக்கு சரியானதல்ல, அவர் இன்னும் என்றென்றும் நினைவு கூறப்படுபவர்”.
“நீங்கள் இந்த விஷயத்தில் மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறியதற்கு என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன், ஏனென்றால் நான் ஒரு நடிகராக இருந்து, எதிர்காலத்தில் உங்கள் அளவிலான ஒரு நடிகரைப்பற்றி யாராவது தவறாக பேசினாலும் நானும் அதையே செய்வேன், நல்ல நம்பிக்கையுடன், கடவுள் ஆசீர்வதிக்கட்டும்” என்று விஷால் பதிவிட்டுள்ளார்.






