என் வாழ்க்கையே மாறிடுச்சி.. டிராகன் பட நடிகை கயாடு லோகர்

என் வாழ்க்கையே மாறிடுச்சி.. டிராகன் பட நடிகை கயாடு லோகர்


பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தில் பல்லவி என்ற ரோலில் நடித்து இருந்தவர் கயாடு லோஹர். சற்று கிளாமர் ஆன ரோல் என்றாலும் அதில் நடித்து இளசுகளை கவர்ந்துவிட்டார் அவர்.

தற்போது சென்சேஷன் நடிகையாக மாறி இருக்கும் அவர் தற்போது டிராகன் படம் தனது வாழ்க்கையை மாற்றிவிட்டது என கூறி இருக்கிறார்.

என் வாழ்க்கையே மாறிடுச்சி.. டிராகன் பட நடிகை கயாடு லோகர் | Dragon Changed My Life Kayadu Lohar

வைரல் பதிவு

அஸ்வத் மாரிமுத்து எனக்கு முதலில் ஜூம் காலில் கதை சொல்லும்போது கீர்த்தி ரோலுக்காக கூறினார். அதில் நடிக்க அதிகம் ஆவலுடன் இருந்தேன். ஆனால் அதன் பிறகு அவரிடம் இருந்து அழைப்பு வரவில்லை. படம் என் கையை விட்டு போய்விட்டது என நினைத்தேன்.

ஆனால் ஒரு மாதம் கழித்து அவர் என்னை மீண்டும் அணுகி பல்லவி ரோல் பற்றி கூறினார். இது இரண்டு ஹீரோயின் கதை என யோசிக்கவேண்டாம், மக்களுக்கு உன்னை பிடிக்கும் வகையில் தான் காட்டுவேன் என கூறினார்.

அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். கொடுத்த வாக்கை காப்பாற்றியதற்கு நன்றி அஸ்வத் மாரிமுத்து. எனக்கு சிறந்த ஒரு அறிமுக படத்தை கொடுத்தீர்கள். உங்களுக்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்.

பிரதீப் மாதிரி உண்மையான நண்பரை பார்க்க முடியாது. உங்கள் இயக்கத்தில் நடிக்க காத்திருக்கிறேன் என கயாடு லோகர் தெரிவித்து இருக்கிறார். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *