எதிர்நீச்சல் 2 சீரியலில் நடிக்க காரணம் என்ன? ஆலிவர் தேவசகாயமாக நடிக்கும் அபிஷேக் கூறிய பதில்

எதிர்நீச்சல் நடிகர் அபிஷேக்
எதிர்நீச்சல் 2 சீரியலில் சமீபத்தில் என்ட்ரி கொடுத்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் நடிகர் அபிஷேக். இவர் இந்த சீரியலில் ஆலிவர் தேவசகாயம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவர் இதற்கு முன், எதிர்நீச்சல் சீரியல் இயக்குநர் திருச்செல்வம் இயக்கிய கோலங்கள் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காரணம் என்ன
இந்த நிலையில், நடிகர் அபிஷேக் எதிர்நீச்சல் 2 சீரியலில் நடிப்பதற்கான காரணம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
இதில், “எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு மிக முக்கிய காரணம் இயக்குநர் திருச்செல்வம். மற்றொரு காரணம் சன் தொலைக்காட்சி நிர்வாகம். கோலங்கள் சீரியலுக்கு பின், உங்கள் தகுதிக்கு ஏற்ப ஒரு விஷயம் இருந்தால் உங்களை கட்டாயம் அழைப்போம் என இயக்குநர் கூறியிருந்தார்.
எதிர்நீச்சல் சீரியலில், கேப்டன் ஆலிவர் தேவசகாயம் என்கிற பாத்திரம், சிறிய பாத்திரமாகவே இருந்தது. ஆனால், பிறகு மக்களிடம் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அந்த பாத்திரம் தொடர்ந்து நீடித்து வருகிறது” என கூறினார்.






