எதிர்நீச்சல் முதல் ராஜா ராணி வரை.. 2013ல் தமிழ் சினிமாவில் வந்த சிறந்த படங்கள்.. ஸ்பெஷல் தொகுப்பு

எதிர்நீச்சல் முதல் ராஜா ராணி வரை.. 2013ல் தமிழ் சினிமாவில் வந்த சிறந்த படங்கள்.. ஸ்பெஷல் தொகுப்பு


2013ல் தமிழ் சினிமாவில் வெளிவந்த சூப்பரான படங்களின் லிஸ்ட்டை விரிவாக பார்க்கலாம்.

எதிர்நீச்சல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் 2013ல் மே 1ம் தேதி வெளியான படம் இது. அவர் ஹீரோவாக நடிக்க தொடங்கிய காலகட்டம் அது.


எதிர்நீச்சல் படத்தில் அவரது நடிப்பு அதிகம் பாராட்டுகளை பெற்றது. அதிலும் அனிருத்தின் பாடல்கள் அனைத்தும் பெரிய ஹிட் ஆனது.

தனது பெயர் மற்றவர்கள் கேலி செய்யும் வகையில் இருக்கிறது என புலம்பும் ஒரு நபர் அதை மாற்றுகிறார். ஆனால் அதே பெயருக்காக எதையாவது சாதிக்க வேண்டும் என மாரத்தான் ஓடுகிறார். அதில் ஜெயித்தாரா, அதற்காக என்னவெல்லாம் செய்தார் என்பது தான் படத்தின் கதை.

ராஜா ராணி

தற்போது டாப் இயக்குனராக ஜொலிக்கும் அட்லீயின் முதல் படம் தான் ராஜா ராணி. காதல் தோல்விக்கு பிறகும் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்கிற விஷயத்தை மிகவும் அழகாக சொல்லி இருக்கிறார் அட்லீ.

ஆர்யா, நயன்தாரா இருவருமே எதார்த்தமாக நடித்து இருப்பார்கள். தற்போதும் பலரும் ரசித்து பார்க்கும் படங்களில் ராஜா ராணியும் ஒன்று.

எதிர்நீச்சல் முதல் ராஜா ராணி வரை.. 2013ல் தமிழ் சினிமாவில் வந்த சிறந்த படங்கள்.. ஸ்பெஷல் தொகுப்பு | 2013 Best Tamil Movies

விஸ்வரூபம்

பல சர்ச்சைகளை சந்தித்த படம் இது. கமல் நாட்டை விட்டே போய்விடுவேன் என மிகவும் ஆதங்கத்துடன் பேட்டி கொடுக்கும் அளவுக்கு அதன் ரிலீசுக்கு எதிர்ப்புகள் இருந்தது.

கமல் கெரியரில் இந்த அளவுக்கு எதிர்ப்பு வேறு எந்த படத்திற்கும் சந்தித்திருக்க மாட்டார்.


மற்ற இடங்களில் வெளியாகி 10 நாட்களுக்கு பிறகு தான் தமிழ்நாட்டில் இந்த படம் ரிலீஸ் ஆனது. அப்படி என்னதான் இருக்கு என மக்கள் அதிகம் இந்த படத்தை சென்று பார்த்தார்கள். அந்த வகையில் சர்ச்சைகள் தான் விஸ்வரூபம் படத்திற்கு விளம்பரமாக அமைந்தது.

சூது கவ்வும்

2013 மே 1ம் தேதி ரிலீஸ் ஆன இந்த படத்தை நலன் குமாரசாமி இயக்கி இருந்தார். விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ரமேஷ் திலக், கருணாகரன் என தற்போது முன்னணியில் இருக்கு நடிகர்கள் பலரும் சூது கவ்வும் படத்தில் நடித்து இருக்கிறார்கள்.

ஹீரோவின் கண்ணனுக்கு மட்டுமே தெரியும் பெண்ணாக சஞ்சிதா ஷெட்டி நடித்து இருந்தார்.

காமெடி, மாஸ் காட்சிகள் என என்டர்டைன்மெண்ட்டுக்கு குறை வைக்காத அளவுக்கு இந்த படம் இருக்கும்.

எதிர்நீச்சல் முதல் ராஜா ராணி வரை.. 2013ல் தமிழ் சினிமாவில் வந்த சிறந்த படங்கள்.. ஸ்பெஷல் தொகுப்பு | 2013 Best Tamil Movies

என்றென்றும் புன்னகை

ஜீவா, சந்தானம், வினய் என மூன்று நண்பர்களின் கதை தான் இந்த படம். மூவரும் சேர்ந்து ஒரு ad ஏஜென்சி தொடங்குகிறார்கள். நெருங்கிய நண்பர்கள் ஒருகட்டத்தில் சண்டை போட்டு பிரியவும் செய்கிறார்கள்.

பெண்களே பிடிக்காது என எப்போதும் கோபத்தில் இருக்கும் ஜீவா ஒருகட்டத்தில் த்ரிஷா மீது காதலில் விழுகிறார்.

அந்த காதல் கைகூடியதா, ஜீவா தனது நண்பர்கள் உடன் மீண்டும் சேர்ந்தாரா இல்லையா என்பதை படத்தில் காட்டி இருப்பார் இயக்குனர்.

விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் அளவுக்கு காமெடி, அளவான ரொமான்ஸ், செண்டிமெண்ட் என அனைத்தும் இந்த படத்தில் இருக்கும்.

எதிர்நீச்சல் முதல் ராஜா ராணி வரை.. 2013ல் தமிழ் சினிமாவில் வந்த சிறந்த படங்கள்.. ஸ்பெஷல் தொகுப்பு | 2013 Best Tamil Movies

பாண்டியநாடு

விஷால், லட்சுமி மேனன் ஜோடியாக நடித்து இருந்த இந்த படம் 2013 நவம்பர் 2ம் தேதி ரிலீஸ் ஆனது.

விஷால் கெரியரில் முக்கிய படங்களில் ஒன்றாக இது இருந்து வருகிறது.

எதிர்நீச்சல் முதல் ராஜா ராணி வரை.. 2013ல் தமிழ் சினிமாவில் வந்த சிறந்த படங்கள்.. ஸ்பெஷல் தொகுப்பு | 2013 Best Tamil Movies

தலைவா

விஜய் நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான படம் தலைவா. விஜய் அரசியலுக்கு வர விரும்புகிறார் என்பதை அந்த படத்தின் டேக் லைன் உறுதிப்படுத்தியது. அதுக்காகவே அந்த படத்திற்கு அரசியல் எதிர்ப்புகள் வந்தது. படத்தின் ரிலீஸ் எவ்வளவு பிரச்சனைகளை சந்தித்தது என விஜய் ரசிகர்கள் எல்லோருக்கும் நினைவிருக்கும்.

விஜய் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார். அவர் அங்கேயே இருக்கும் அமலா பால் உடன் காதலில் விழுகிறார். அதன் பின் ஒருகட்டத்தில் இந்தியாவில் இருந்து அவரது அப்பாவை சந்திக்க அழைப்பு வருகிறது.

மும்பையில் பெரிய டான் ஆக இருக்கும் அப்பா சத்யராஜை அவரை சந்தித்தால், அந்த நேரம் போலீஸ் வந்து அவரை கைது செய்கிறது மும்பை போலீஸ். அமலா பால் போலீசாக நடித்து ஏமாற்றி இருக்கிறார் என்பது ஷாக் கொடுக்கிறது.

அதன் பின் அப்பா கொல்லப்பட விஜய் எப்படி தலைவன் ஆனார் என்பது தான் இந்த படம்.
 

எதிர்நீச்சல் முதல் ராஜா ராணி வரை.. 2013ல் தமிழ் சினிமாவில் வந்த சிறந்த படங்கள்.. ஸ்பெஷல் தொகுப்பு | 2013 Best Tamil Movies


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *