எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் நேரம் திடீர் மாற்றம்… ரசிகர்கள் வருத்தம்

எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது, திருச்செல்வம் இயக்கத்தில் சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வரும் தொடர்.
பார்கவி பிரச்சனை முடிவடைந்து இப்போது தர்ஷன்-அன்புக்கரசி திருமண ஏற்பாடுகள் தான் சூடு பிடிக்க நடக்கிறது.
குணசேகரன், இந்த திருமணத்தை நடத்தியே ஆக வேண்டும், நான் ஜெயிக்க வேண்டும் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என இருக்கிறார்.
இதற்கு இடையில் ஈஸ்வரி குணசேகரனிடம் தர்ஷன் திருமணம் நடக்க கூடாது என பேச்ச வார்த்தை நடத்தினார், ஆனால் அது கடைசியில் சோகமாக முடிந்தது.
மாற்றம்
ஈஸ்வரியை குணசேகரன் கீழே தள்ளிவிட அவர் உயிருக்கு போராடி வருகிறார். தர்ஷன், நந்தினி ஆகியோர் போராடி எப்படியோ ஈஸ்வரியை மருத்துவமனையில் அனுமதித்துவிடுகிறார்கள்.
மருத்துவர் அவருக்கு நினைவுவர கொஞ்சம் நேரம் ஆகும், எப்போது சரியாவார் என்பது தெரியாது என கூற குடும்பத்தினர் அனைவரும் ஷாக் ஆகிறார்கள்.
இப்படி கதை பரபரப்பின் உச்சமாக செல்ல சீரியலில் ஏற்பட்டுள்ள ஒரு மாற்றத்தின் தகவல் வந்துள்ளது.
அதாவது திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இனி 5 நாள் மட்டுமே தான் ஒளிபரப்பாகுமாம், சனிக்கிழமை கிடையாது.
டாப் குக் டூப் குக் சீசன் 2 ஒளிபரப்பாக இருப்பதால் இந்த மாற்றம் என கூறப்படுகிறது.