எதிர்நீச்சல் சீரியல் நடிகை பார்வதியின் அப்பாவை பார்த்துள்ளீர்களா.. அழகிய புகைப்படம் இதோ

எதிர்நீச்சல் சீரியல்
தலையில் அடிபட்டு ஈஸ்வரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு காரணமான ஆதி குணசேகரனை கைது செய்யவேண்டும் என ஜனனியுடன் இணைந்து அனைவரும் போராடி வருகிறார்கள்.
இந்த சமயத்தில் இந்த கேசில் இருந்து கொற்றவை வெளியேற்றப்பட்டுவிட்டார். நேர்மையான அதிகாரிகளின் தலைமையில் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், ஈஸ்வரியாக இதுவரை நடித்து வந்த நடிகை கனிகா எதிர்நீச்சல் சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
அவருக்கு பதிலாக வேறு யார் நடிக்கப்போகிறார் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம் யார் அந்த கதாபாத்திரத்துக்கு புதிதாக நடிக்க வரப்போகிறார் என்று.
நடிகை பார்வதி
தொகுப்பாளினியாக இருந்து பின் சின்னத்திரையில் நடிகையாக மாறியவர் பார்வதி. இவர் எதிர்நீச்சல் 2 சீரியலில் கதாநாயகி ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை பார்வதி தனது அப்பாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..