எதிர்நீச்சல் சீரியலில் கொடூர வில்லனாக நடிக்கும் வேல ராமமூர்த்தியின் ஒருநாள் சம்பளம்… எவ்வளவு தெரியுமா?
எதிர்நீச்சல் தொடர்கிறது
கடத்தல், சொத்து பிரச்சனை, கொலை, பெண் அடிமை, திருமணம், பிரிப்பது Repeat, இப்படியே எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் கதைக்களம் செல்வதாக ரசிகர்கள் அதிகம் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இப்போது கதையில் ஜனனி கர்ப்பமானதால் சமையல் தொழிலை தொடங்கும் எண்ணத்தில் யாரும் இல்லை.
ஈஸ்வரி குணமடைந்துவிட்டதாக தகவல் வர அவரது மருத்துவ செலவை நானே கட்டுகிறேன் என குணசேகரன் கூற வேண்டாம் என கண்டிஷன் போட்டு வருகிறார் தர்ஷினி.
இதற்கு இடையில் குணசேகரன் ஆடிட்டர் வீட்டிற்கு வந்து, உங்கள் அண்ணன் சொத்தை எல்லாம் உங்கள் இருவர் பெயருக்கு மாற்றிவிட்டார். அவரது ஜாமின் கேன்சல் ஆகும் நிலைமையில் உள்ளது, சில நாட்களில் அவர் ஜெயில் சென்றுவிடுவார் என்கிறார்.
சொத்து எழுதிகொடுப்பதற்கு பின்னால் குணசேகரன் என்ன பிளான் வைத்துள்ளார் தெரியவில்லை.
சம்பளம்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அனைவராலும் வெறுக்கப்படும் கதாபாத்திரமாக பார்க்கப்படுவது வேல ராமமூர்த்தி நடிக்கும் குணசேகரன் கதாபாத்திரம் தான். மாரிமுத்து அவர்கள் தான் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
அவர் மாரடைப்பால் உயிரிழக்க அவரது கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடிக்கிறார்.
இந்த தொடரில் நடிப்பதற்கு வேல ராமமூர்த்தி ஒரு நாளைக்கு ரூ. 40 ஆயிரம் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.






