ஊழலை மையமாக கொண்டு வெளிவந்து ஹிட்டடித்த படங்கள்

ஊழலை மையமாக கொண்டு வெளிவந்து ஹிட்டடித்த படங்கள்

தமிழ் சினிமாவில் எந்த ஜானர் எடுத்தாலும் அதில் படங்கள் இருக்கும்.

அப்படி ஊழல் பற்றி படங்கள் இருக்கிறதா என்றால் இருக்கிறது, உடனே ரசிகர்களுக்கு சில படங்களும் நியாபகம் வந்திருக்கும். ஊழல் பற்றிய கதைகள் என்றதுமே பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் படங்கள் தான் முதலில் நியாபகம் வரும்.

சரி நாம் இந்த பதிவில் ஊழல் பற்றி பேசிய சில படங்களை காண்போம்.

ஊழலை மையமாக கொண்டு வெளிவந்து ஹிட்டடித்த படங்கள்... ஓர் பார்வை | Best Tamil Movies On Corruption

இந்தியன் (1996)

பிரம்மாண்ட இயக்குனராக கொண்டாடப்படும் ஷங்கர் இயக்கத்தில் 1996ம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். 

முதல் பாகத்தில், சுதந்திரப் போராட்ட வீரராக இருந்த சேனாபதி தனது மகளின் மரணத்திற்குப் பிறகு லஞ்சம் வாங்கியவர்களைக் கொலை செய்து, சமூகத்தைச் சீர்திருத்த முயல்வார்.

ஊழலை மையமாக கொண்டு வெளிவந்து ஹிட்டடித்த படங்கள்... ஓர் பார்வை | Best Tamil Movies On Corruption

சாமுராய்

கடந்த 2002ம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் விக்ரம், அனிதா ஹசனாந்தனி, ஜெயா சீல், நாசர் என பலர் நடிக்க வெளியாக திரைப்படம். தியாகுவின் தோழி தனது கல்லூரியில் போதைப்பொருள் கடத்தலை அம்பலப்படுத்த ஆதரவைத் திரட்டத் தவறியதால் தற்கொலை செய்து கொள்கிறாள்.

அதன் பிறகு, அதற்குப் பொறுப்பான ஊழல்வாதிகளைத் தண்டிக்க ஒவ்வொரு இரவும் ஒரு கிளர்ச்சிப் பணியை நடத்துகிறான். படத்தின் கதையை தாண்டி ஹாரிஸ் ஜெயராஜ் இயக்கத்தில் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே செம ஹிட்.

ஊழலை மையமாக கொண்டு வெளிவந்து ஹிட்டடித்த படங்கள்... ஓர் பார்வை | Best Tamil Movies On Corruption

சிட்டிசன்

சரவண சுப்பையா இயக்கத்தில் அஜித், மீனா, வசுந்தரா தாஸ், நக்மா மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் சிட்டிசன். வழக்கறிஞர் படிப்பினை ஒருசில நிபந்தனைகளுடன் கற்று தன் அடையாளத்தை மறைத்து மெக்கானிக்காக வேறுஒரு இடத்தில் வாழ்ந்து வருகிறார் அறிவானந்தம் என்கிற இளைஞன்.

இவர் ஒரு மாவட்ட கலெக்டர், நீதிபதி, காவற்துறை அதிகாரி ஆகியோர் பகல் நேரத்திலேயே கடத்துகிறார்.
இவர்களை ஏன் கடத்தினார், அதற்கான காரணம் என்ன என்பதே படத்தின் கதை.

ஊழலை மையமாக கொண்டு வெளிவந்து ஹிட்டடித்த படங்கள்... ஓர் பார்வை | Best Tamil Movies On Corruption

அந்நியன்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஊழலை மையப்படுத்தி வெளியான ஒரு சிறந்த படம். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் தயாரான இப்படத்தில் விக்ரம், சதா, விவேக், பிரகாஷ் ராஜ், நாசர், கலாபவன் மணி, நெடுமுடி வேணு என பல கலைஞர்கள் நடித்துள்ளனர்.

ஊழலை மையமாக கொண்டு வெளிவந்து ஹிட்டடித்த படங்கள்... ஓர் பார்வை | Best Tamil Movies On Corruption

சிவாஜி

சிவாஜி The Boss, இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஸ்ரேயா, விவேக் என பலர் நடிக்க கடந்த 2007ம் ஆண்டு வெளியான திரைப்படம். ரூ. 50 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசை. ஊழல் செய்பவர்களை அவர்களது வழியில் சென்று அவர்களின் தவறை வெளிக்கொண்டு வந்த ஒரு திரைப்படம்.  

ஊழலை மையமாக கொண்டு வெளிவந்து ஹிட்டடித்த படங்கள்... ஓர் பார்வை | Best Tamil Movies On Corruption

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *