உலகளவில் F1 திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

உலகளவில் F1 திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா


F1

கடந்த மாதம் 27ம் தேதி வெளிவந்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ள திரைப்படம் F1. கார் ரேஸை மையப்படுத்தி உருவான இப்படத்தை உலக புகழ்பெற்ற இயக்குநர் Joseph Kosinski இயக்கியிருந்தார்.

உலகளவில் F1 திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | F1 Movie Worldwide Box Office Collection

Brad Pitt, Kerry Condon, Damson Idris, Javier Bardem ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, கார் ரேஸில் மும்முரமாக இறங்கி அசத்திக்கொண்டிருக்கும் அஜித் குமாரிடம் கூட, F1 மாதிரியான படங்களில் நடிப்பீர்களா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ‘கண்டிப்பாக F1 மற்றும் Fast and furious மாதிரியான படங்களில் நடிப்பேன்’ என அவர் கூறியுள்ளார்.

உலகளவில் F1 திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | F1 Movie Worldwide Box Office Collection

வசூல்



மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ள இப்படம் வசூலில் வேட்டையாடி வருகிறது. இந்த நிலையில், 9 நாட்களை பாக்ஸ் ஆபிசில் கடந்திருக்கும் F1 திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் மட்டுமே ரூ. 1600 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.

உலகளவில் F1 திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | F1 Movie Worldwide Box Office Collection

ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இந்தியாவிலும் மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது. அதன்படி, F1 திரைப்படம் இந்தியாவில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இங்குள்ள ரசிகர்கள் பலரும் F1 படத்தை பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில், இந்தியாவில் மட்டுமே ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இந்த வசூல் வேட்டை தொடரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

உலகளவில் F1 திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | F1 Movie Worldwide Box Office Collection


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *