ஈஸ்வரி காலில் விழுந்து கதறி அழும் சக்தி.. எதிர்நீச்சல் சீரியல் எமோஷ்னல் புரோமோ

ஈஸ்வரி காலில் விழுந்து கதறி அழும் சக்தி.. எதிர்நீச்சல் சீரியல் எமோஷ்னல் புரோமோ


எதிர்நீச்சல் சீரியல்

ஆதி குணசேகரன் அடித்ததால் மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில் ஈஸ்வரி அனுமதிக்கப்பட்டார். அவரை காப்பாற்றுவது மிகவும் கடினமான விஷயம் என முதலில் மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால், அதன்பின் அவருடைய உடல்நிலை முன்னேற்றம் அடைந்து இருக்கிறது, அவர் மீண்டு வந்துவிடுவார் என்றனர்.

ஈஸ்வரி காலில் விழுந்து கதறி அழும் சக்தி.. எதிர்நீச்சல் சீரியல் எமோஷ்னல் புரோமோ | Sakthi Cried On Eswari Return Ethirneechal Serial

ஈஸ்வரி எப்போது மீண்டும் என்ட்ரி கொடுப்பார் என்றுதான் ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடிகை கனிகா நடித்து வந்தார். ஆனால், அதன்பின் தனது சொந்த விஷயங்கள் காரணமாக எதிர்நீச்சல் சீரியலில் இருந்து அவர் தற்போது வெளியேறி உள்ளார்

அவருக்கு பதிலாக நடிகை ஸ்ரீஜா தற்போது கனிகா கதாபாத்திரத்தில் நடிக்க களமிறங்கியுள்ளார்.

கதறி அழும் சக்தி

அதற்கான புரோமோ வீடியோ வெளியாகியுள்ள நிலையில், இதில் ஈஸ்வரி மீண்டு வந்ததை பார்த்தவுடன் ஜனனி, சக்தி என அனைவரும் உணர்ச்சிவசப்படுகின்றனர். மேலும் சக்தி கண்ணீர்விட்டு ஈஸ்வரியின் காலில் விழுந்து கதறி அழுகிறார்.

ஈஸ்வரி காலில் விழுந்து கதறி அழும் சக்தி.. எதிர்நீச்சல் சீரியல் எமோஷ்னல் புரோமோ | Sakthi Cried On Eswari Return Ethirneechal Serial

மறுபக்கம், அறிவுக்கரசி, ஞானம் மற்றும் கதிர் ஆகியோரால் ஈஸ்வரிக்கு மீண்டும் ஏதாவது விபரீதமாக நடந்தால், நடுரோட்டிற்கு சென்று, என் மகன்கள்தான் இப்படி செய்கிறார்கள் என கத்துவேன் என்று விசாலாட்சி தனது மகன் ஆதி குணசேகரனிடம் கூறுகிறார். ஈஸ்வரியின் என்ட்ரி, விசாலாட்சியின் அதிரடி என எதிர்நீச்சல் சீரியல் பரபரப்பின் உச்சத்தில் இருக்க, அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *