இளம் வயதில் கமலிடம் காதலை சொன்ன நடிகை.. ஆனால் இப்படி சொல்லி நிராகரித்துவிட்டாரா?

நடிகர் கமல்ஹாசனுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. தற்போது 70 வயதாகும் கமல் இப்போதும் பிசியாக படங்களில் நடித்து வருகிறார்.
மறுபுறம் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் சமீபத்தில் பதவி ஏற்றுக்கொண்டார்.
காதலை சொன்ன நடிகை
இளம் வயதில், கல்லூரி நாட்களில் நடிகர் கமலை லட்சுமி ராமகிருஷ்ணன் காதலித்தாராம். அதை அவரிடமே சொல்ல வேண்டும் என முடிவெடுத்து சொல்ல போயிருக்கிறார் லட்சுமி.
ஆனால் தங்கை மாதிரி என சொல்லி கமல் அவரை அனுப்பிவிட்டாராம். இந்த தகவலை லட்சுமி ராமகிருஷ்ணன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கூறி இருக்கிறார்.