இயக்குனர் ஹரி மீது புகார் கொடுத்த பிரஷாந்த்! தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்து

இயக்குனர் ஹரி மீது புகார் கொடுத்த பிரஷாந்த்! தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்து


பிரஷாந்த் நடிப்பில் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த அந்தகன் 2024ல் ரிலீஸ் ஆனது. அது ரீமேக் படம் தான் என்றாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அடுத்து தெலுங்கு படமான கோர்ட் என்ற படத்தை தற்போது ‘ரஞ்சன்’ என்ற பெயரில் பிரஷாந்த் ரீமேக் செய்து வருகிறார்.

இயக்குனர் ஹரி மீது புகார் கொடுத்த பிரஷாந்த்! தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்து | Hari Prashanth Movie Drop Issue Producer Council


ஹரி மீது புகார்

இயக்குனர் ஹரி மற்றும் பிரஷாந்த் இருவரும் ஒரு படத்தில் இணைய இருப்பதாக கடந்த வருடம் அறிவிப்பு வந்தது. அந்த படத்தின் முதற்கட்ட தயாரிப்பு பணிகளும் நடந்தது.

ஆனால் அந்த படம் தற்போது டிராப் ஆகிவிட்டதாம். அதனால் ஹரி வாங்கிய அட்வான்ஸ் தொகை மற்றும் ப்ரீ ப்ரொடக்ஷ்ன் செலவு ஆகியவற்றை திருப்பி கொடுக்க வேண்டும் என பிரஷாந்த் தரப்பு கேட்கிறதாம்.

ஆனால் ஹரி தான் வாங்கிய அட்வான்ஸ் தொகை மட்டுமே திருப்பி தர முடியும் என கூறிவிட்டாராம். தன்னால் தற்போது தயாரிப்பாளர் சங்கம் வரை பஞ்சாயத்து சென்று இருக்கிறது.
 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *