இப்போதான் தவெக, அதற்கு முன் நான்.. விஜய்யின் அப்பா எஸ்ஏசி சொன்ன விஷயம்

இப்போதான் தவெக, அதற்கு முன் நான்.. விஜய்யின் அப்பா எஸ்ஏசி சொன்ன விஷயம்


நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி தான் ஆரம்பகாலத்தில் அவரது கெரியருக்கு அதிகம் உதவியவர். சொந்தமாக படம் எடுத்து மகனை ஹீரோவாக்கி, அதன் பின் கெரியரில் உயர பல விஷயங்களை செய்தவர்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், விஜய் மற்றும் அப்பா எஸ்ஏசி இடையே கடந்த சில வருடங்களாகவே பிரச்சனை இருந்து வந்தது. அதனால் பெற்றோரிடம் இருந்து விஜய் பிரிந்து இருப்பதாகவும் சொல்லப்பட்டது. எஸ்ஏசிக்கு எதிராக விஜய் வழக்கு போட்டதெல்லாம் வேறு கதை.

 எஸ்ஏசி தற்போது தனியாக புது வீடு கட்டி மனைவி ஷோபா உடன் செட்டில் ஆகி இருக்கிறார். தற்போது விஜய் உடன் இணக்கம் ஏற்பட்டு இருக்கும் நிலையில், அவ்வப்போது விஜய் நடத்தும் கட்சி நிகழ்ச்சிகளில் எஸ்ஏசி மற்றும் ஷோபா இருவரையும் பார்க்க முடியும்.

இப்போதான் தவெக, அதற்கு முன் நான்.. விஜய்யின் அப்பா எஸ்ஏசி சொன்ன விஷயம் | Tvk Now But I Like Anna Kalaignar Sa Chandrasekhar

2 வருடமாக தான் தவெக..

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எஸ்ஏசி தான் இப்போது 2 வருடமாக தான் தவெக உறுப்பினர் எனவும் அதற்கு முன் தான் எந்த கட்சியிலும் இல்லை எனவும் கூறி இருக்கிறார்.



“நான் 2 வருடத்திற்கு முன் எந்த காட்சியிலும் இல்ல. அதனால் எனக்கு அண்ணா, பெரியார், கலைஞர் என மூவரையும் பிடிக்கும்” என எஸ்ஏசி கூறி இருக்கிறார். 

இப்போதான் தவெக, அதற்கு முன் நான்.. விஜய்யின் அப்பா எஸ்ஏசி சொன்ன விஷயம் | Tvk Now But I Like Anna Kalaignar Sa Chandrasekhar


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *