இனியா திருமணத்துடன் முடிவுக்கு வரும் பாக்கியலட்சுமி சீரியல்… கடைசி காட்சி போட்டோ, இதோ பாருங்கள்

பாக்கியலட்சுமி
குடும்ப பெண்கள் கொண்டாடும் தொடராக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்தது பாக்கியலட்சுமி சீரியல்.
கடந்த ஜுலை 27ம் தேதி 2020ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் 1500 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்தது.
அடிமைப்படுத்தும் குடும்பத்தில் இருந்து எப்படி ஒரு குடும்பத் தலைவி தனது திறமையை வெளிப்படுத்துகிறார் என்பதை காட்டியது.
போட்டோ
இப்போது கதையில் இனியா-நிதிஷ் பிரச்சனை தான் ஓடிக் கொண்டிருக்கிறது.
நிதிஷை நான்தான் கொலை செய்தேன் என கோபி ஒப்புக்கொள்ள கைதாகிறார். இன்னொரு பக்கம் பாக்கியா, நிதிஷ் கொலையில் ஏதோ சூழ்ச்சி உள்ளது, அதுஎன்ன என கண்டுபிடிக்கிறார்.
வரும் ஆகஸ்ட் 2வது வாரத்தில் சீரியல் முடிவுக்கு வரவுள்ள நிலையில் சீரியலின் கடைசிகாட்சி புகைப்படம் வெளியாகியுள்ளது. அதாவது இனியா மற்றும் ஆகாஷ் திருமணத்துடன் பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வந்துள்ளது. இதோ போட்டோ,